விசுவாவசு ஆண்டு பங்குனி-28 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : நவமி இரவு 9.58 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம் : உத்திராடம் காலை 11.13 மணி வரை பிறகு திருவோணம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருவோண விரதம். குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், ஒழுகைமங்கலம் ஸ்ரீ மாரியம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் பவனி. ஸ்ரீ சென்னமல்லீசுவரர் விடாயாற்று. பாபநாசம் ஸ்ரீ சிவபெருமான் பெரிய சப்பரத்தில் பவனி. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமான் காலை பல்லக்கு வெண்ணெய்த் தாழி சேவை. கோவில்பட்டி ஸ்ரீ சுவாமி வெள்ளி சப்பரத்தில் புறப்பாடு. நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி அம்மன், திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருஇந்துளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜர் புறப்பாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் அலங்கார திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை.
மேஷம்-பெருமை
ரிஷபம்-போட்டி
மிதுனம்-உதவி
கடகம்-நலம்
சிம்மம்-நன்மை
கன்னி-பக்தி
துலாம்- முயற்சி
விருச்சிகம்-ஓய்வு
தனுசு- பணிவு
மகரம்-தாமதம்
கும்பம்-மேன்மை
மீனம்-ஆதரவு