ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 10 நவம்பர் 2026: கந்த சஷ்டி விழா தொடக்கம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஐப்பசி - 24 (செவ்வாய்க்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : பிரதமை பிற்பகல் 2.02 மணி வரை பிறகு துவிதியை

நட்சத்திரம் : விசாகம் காலை 9.55 மணி வரை பிறகு அனுஷம்

யோகம் : மரண/சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்

சந்திர தரிசனம். சகல சுப்ரமணியர் கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடக்கம். பூசலார் நாயனார் குருபூஜை. குமாரவயலூர் ஸ்ரீ முருகப் பெருமான் உற்சவாரம்பம். மதுரை சமீபம் சோலைமலை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு மகா அபிஷேகம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் பால் அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் 3 ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை, திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம் - ஆக்கம்

ரிஷபம் - ஆதரவு

மிதுனம் - புகழ்

கடகம் - ஓய்வு

சிம்மம் - பாசம்

கன்னி - ஊக்கம்

துலாம் - தனம்

விருச்சிகம் - நலம்

தனுசு - பக்தி

மகரம் - போட்டி

கும்பம் - தெளிவு

மீனம் - லாபம்

SCROLL FOR NEXT