பராபவ ஆண்டு, புரட்டாசி-14 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பஞ்சமி பிற்பகல் 2.55 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம் : கார்த்திகை காலை 8.54 மணி வரை பிறகு ரோகிணி
யோகம் : மரணயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமியநாராயணப் பெருமாள் திருமஞ்சனம்.
திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு. கதிராமங்கலம் ஸ்ரீ வனதுர்கை காலை சிறப்பு அபிஷேகம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள், ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியபெருமாள் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம்.
மேஷம் - வெற்றி
ரிஷபம் - போட்டி
மிதுனம் - கவனம்
கடகம் - ஓய்வு
சிம்மம் - லாபம்
கன்னி - பக்தி
துலாம் - புகழ்
விருச்சிகம் - ஆர்வம்
தனுசு - ஆதரவு
மகரம் - சிந்தனை
கும்பம் - பெருமை
மீனம் - நன்மை