பராபவ ஆண்டு, வைகாசி-18 (திங்கள்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பிரதமை மாலை 4.44 வரை பிறகு துவிதியை
நட்சத்திரம் : கேட்டை இரவு 7.21 வரை பிறகு மூலம்
யோகம் : சித்த/அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். பழனி ஸ்ரீ ஆண்டவர் தங்க குதிரையில் புறப்பாடு. காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் காலை நாச்சியார் திருக்கோலம், இரவு யானை வாகனத்தில் திருவீதியுலா. மதுரை ஸ்ரீ கூடலழகர் எடுப்பு சப்பரத்தில் சப்தாவர்ணம், உபயநாச்சியார்களுடன் பவனி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ திருமஞ்சன கருடாழ்வாருக்குத் சேவை.
திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மஹாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீகபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு, திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பவனி. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் தலங்களில் காலை அபிஷேகம்.
மேஷம் - சிரத்தை
ரிஷபம் - வெற்றி
மிதுனம் - ஆர்வம்
கடகம் - அன்பு
சிம்மம் - உற்சாகம்
கன்னி - பொறுமை
துலாம் - நலம்
விருச்சிகம் - ஆக்கம்
தனுசு - நன்மை
மகரம் - மகிழ்ச்சி
கும்பம் - அமைதி
மீனம் - உயர்வு