திருப்பதி கோவிலில் நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து பக்தர்கள் கூட்டம் குறையாமல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வைகுந்தம் தங்கும் அறைகள் முழுவதும் பக்தர்கள் நிரம்பி உள்ளனர்.
தரிசன வரிசையில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் உள்ள ஷீலா தோரணம் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர்.
திருப்பதியில் நேற்று 80,214 பேர் தரிசனம் செய்தனர். 36,994 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 4.81 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.4.18 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.