சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்த காட்சி. 
ஆன்மிகம்

திருப்பதி பிரம்மோற்சவ விழா நிறைவு

மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என பக்தி பரவசத்துடன் விண்ணதிர முழக்கங்களை எழுப்பினர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 15-ந்தேதி தொடங்கிய வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று நிறைவு பெறுகிறது. எட்டு நாட்கள் காலை, இரவு என பல்வேறு வாகனங்களில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த ஏழுமலையான், நேற்று இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் குதிரை வாகனத்தில் வாகன சேவையால் பக்தி பரவசம் ஏற்படுத்தினார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. பிரம்மோற்சவ விழா நாட்களில் தினமும் காலை, இரவு என ஏழுமலையான் பல்வேறு வாகனங்களில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பக்தி பரவசம்

பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் குதிரை வாகனத்தில் 4 மாட வீதிகளில் வாகன சேவை நடந்தது. மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என பக்தி பரவசத்துடன் விண்ணதிர முழக்கங்களை எழுப்பினர்.

பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான இன்று காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.

வேத மந்திரங்கள் முழங்க புஷ்கரணிக்கு கொண்டு சென்றனர். புஷ்கரணி சுற்றிலும் இருந்த பக்தர்கள் தீர்த்தவாரியை தரிசனம் செய்தனர். பின்னர் சக்கரத்தாழ்வார்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தீர்த்தவாரி முடிந்த பிறகு ஏராளமான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர். இன்று மாலை கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

SCROLL FOR NEXT