ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள்: 24-11-2026 முதல் 30-11-2026 வரை

இந்த வாரத்திற்குரிய விழாக்கள், விசேஷங்களை விரிவாக பார்க்கலாம்.

24-ந் தேதி (செவ்வாய்)

* பவுர்ணமி.

* திருக்கார்த்திகை திருநாள்

* அனைத்து சிவன் கோவில்களிலும் திருக்கார்த்திகை தீபம்.

* நத்தம் மாரியம்மன் லட்ச தீபம்.

* கீழ்நோக்கு நாள்.

25-ந் தேதி (புதன்)

* திருவண்ணாமலை தெப்ப உற்சவம்.

* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான், சுவாமிமலை முருகன் கோவில்களில் தீர்த்த உற்சவம்.

* மேல்நோக்கு நாள்.

26-ந் தேதி (வியாழன்)

* திருவண்ணாமலை அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் கயிலாசகிரி பிரதட்சணம்.

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.

* சமநோக்கு நாள்.

27-ந் தேதி (வெள்ளி)

* சங்கடகர சதுர்த்தி.

* திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுப்பிரமணியர் தெப்ப உற்சவம்.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.

* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.

* மேல்நோக்கு நாள்.

28-ந் தேதி (சனி)

* திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், மதுரை கூடலழகர் ஆகிய தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை.

* பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு.

* சமநோக்கு நாள்.

29–ந் தேதி (ஞாயிறு)

* முகூர்த்த நாள்.

* தேய்பிறை சஷ்டி விரதம்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.

* திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு.

* மேல்நோக்கு நாள்.

30-ந் தேதி (திங்கள்)

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

* திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் ஆகிய தலங்களில் 1,008 சங்காபிஷேகம்.

* திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

* கீழ்நோக்கு நாள்.

SCROLL FOR NEXT