ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள்: 2-6-2026 முதல் 8-6-2026 வரை

இந்த வாரத்திற்குரிய விழாக்கள், விசேஷங்களை விரிவாக பார்க்கலாம்.

2-ந் தேதி (செவ்வாய்)

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கணபதி உற்சவம் ஆரம்பம்.

* மதுரை கூடலழகர் குதிரை வாகனத்தில் பவனி.

* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ரத உற்சவம்.

* பழனி ஆண்டவர் மயில் வாகனத்தில் பவனி.

* கீழ்நோக்கு நாள்.

3-ந் தேதி (புதன்)

* காஞ்சிபுரம் வரதராஜர் உபய நாச்சியார்களுடன் ரத உற்சவம்.

* மதுரை கூடலழகர் கருட வாகனத்தில் பவனி.

* அரியக்குடி சீனிவாசப் பெருமாள் தெப்ப உற்சவம்.

* கீழ்நோக்கு நாள்.

4-ந் தேதி (வியாழன்)

* முகூர்த்த நாள்.

* சங்கடகர சதுர்த்தி.

* அரியக்குடி சீனிவாசப் பெருமாள் ஆடும் பல்லக்கிலும், இரவு புஷ்பப் பல்லக்கிலும் உலா.

* மதுரை கூடலழகர் விடையாற்று உற்சவம்.

* காஞ்சிபுரம் வரதராஜர் குதிரை வாகனத்தில் பவனி.

* மேல்நோக்கு நாள்.

5-ந் தேதி (வெள்ளி)

* சிரவண விரதம்.

* சாத்தூர் வேங்கடேசர் தோளுக்கினியானில் பவனி.

* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள், திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் தலங்களில் புறப்பாடு.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.

* மேல்நோக்கு நாள்.

6-ந் தேதி (சனி)

* தேய்பிறை சஷ்டி விரதம்.

* திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவர், மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

* மேல்நோக்கு நாள்.

7-ந் தேதி (ஞாயிறு)

* முகூர்த்த நாள்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.

* மேல்நோக்கு நாள்.

8-ந் தேதி (திங்கள்)

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.

* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

* கீழ்நோக்கு நாள்.