ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள்: 15-9-2026 முதல் 21-9-2026 வரை

இந்த வாரத்திற்குரிய விழாக்கள், விசேஷங்களை விரிவாக பார்க்கலாம்.

இந்த வார விசேஷங்கள்

15-ந் தேதி (செவ்வாய்)

* ரிஷி பஞ்சமி.

* திருப்பதி, நாட்டரசன் கோட்டை உற்சவம் ஆரம்பம்.

* மதுரை நவநீத கிருஷ்ணர், ருக்மணி-சத்தியபாமா சமேத கிருஷ்ணர் அலங்காரம்.

* சமநோக்கு நாள்.

16-ந் தேதி (புதன்)

* சஷ்டி விரதம்.

* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசர், கிருஷ்ணர் அவதாரம், சிம்ம வாகனத்தில் உலா.

* திருவில்லிபுத்தூர் பெரியபெருமாள் சந்திர பிரபையில் பவனி.

* குணசீலம், ஆழ்வார் திருநகரி, திருப்பரங்குன்றம், நாட்டரசன் கோட்டை தலங்களில் எம்பெருமான் புறப்பாடு.

* கீழ்நோக்கு நாள்.

17-ந் தேதி (வியாழன்)

* முகூர்த்த நாள்.

* திருவில்லிபுத்தூர் பெரியபெருமாள் அனுமன் வாகனத்தில் பவனி.

* திருப்பதி ஏழுமலையான் காலை சிம்ம வாகனத்தில் பவனி, இரவு முத்துப்பந்தல் அருளிய லீலை.

* சமநோக்கு நாள்.

18-ந் தேதி (வெள்ளி)

* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் வெள்ளி பல்லக்கில் பவனி.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

* சமநோக்கு நாள்.

19-ந் தேதி (சனி)

* நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயருக்கு 5008 வடை அலங்காரம்.

* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசர் வெள்ளி சேஷ வாகனத்தில் பவனி.

* திருப்பதி ஏழுமலையான் மோகினி அலங்காரம்.

* திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.

* கீழ்நோக்கு நாள்.

20-ந்தேதி (ஞாயிறு)

* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் வெள்ளி பல்லக்கில் திருவீதி உலா.

* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசர் ராஜாங்க சேவை.

* திருவில்லிபுத்தூர் பெரியபெருமாள் யானை வாகனத்தில் பவனி.

* கீழ்நோக்கு நாள்.

21-ந் தேதி (திங்கள்)

* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம்.

* திருப்பதி ஏழுமலையான் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் புறப்பாடு.

* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் சூர்ணாபிஷேகம்.

* மேல்நோக்கு நாள்.

SCROLL FOR NEXT