ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள்: 1-9-2026 முதல் 7-9-2026

இந்த வாரத்திற்குரிய விழாக்கள், விசேஷங்களை விரிவாக பார்க்கலாம்.

1-ந் தேதி (செவ்வாய்)

* திருச்செந்தூர் முருகப்பெருமான் கேடயச் சப்பரத்திலும், இரவு பல்லக்கிலும் திருவீதி உலா.

* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* திருவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.

* சமநோக்கு நாள்.

2-ந் தேதி (புதன்)

* தேய்பிறை சஷ்டி விரதம்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.

* திருப்போரூர் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

* கீழ்நோக்கு நாள்.

3-ந் தேதி (வியாழன்)

* கார்த்திகை விரதம்.

* திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு.

* திருப்பதி ஏழுமலை யான் புஷ்பாங்கி சேவை.

* ரத்தினகிரி பாலமுருகன் தங்க ரத உற்சவம்.

* கீழ்நோக்கு நாள்.

4-ந் தேதி (வெள்ளி)

* கோகுலாஷ்டமி.

* மதுரை நவநீத கிருஷ்ணசுவாமி விழா தொடக்கம்.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சன்னிதியில் சுந்தரவல்லித் தாயார் பவனி.

* மேல்நோக்கு நாள்.

5-ந் தேதி (சனி)

* மதுரை நவநீத கிருஷ்ணசுவாமி சேஷ வாகனத்தில் உறியடி உற்சவம்.

* தேரெழுந்தூர், தேவகோட்டை, திண்டுக்கல், பிள்ளையார் பட்டி, உப்பூர் தலங்களில் விநாயகப் பெருமான் உற்சவம் ஆரம்பம்.

* சமநோக்கு நாள்.

6-ந் தேதி (ஞாயிறு)

* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடய சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் பவனி.

* மதுரை நவநீத கிருஷ்ணசுவாமி ஊஞ்சலில் வீணை மோகினி அலங்காரம், இரவு ராமாவதாரம்.

* திருவலஞ்சுழி சுவேத விநாயகர் உற்சவம் ஆரம்பம்.

* மேல்நோக்கு நாள்.

7-ந் தேதி (திங்கள்)

* முகூர்த்த நாள்.

* சர்வ ஏகாதசி.

* உப்பூர் விநாயகப் பெருமான் சிம்ம வாகனத்தில் பவனி.

* மதுரை கூடலழகர், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.

* சமநோக்கு நாள்.