விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல வரும் பக்தர்களால் கோவிலில் கூட்டம் அலைமோதும்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவ விழாவும் ஒன்றாகும்.
இந்த ஆண்டிற்கான ஆனி பிரம்மோற்சவ விழா 6-ந் தேதி (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது.
விழா நாட்களில் காலையும், மாலையும் விநாயகர், சின்னநாயகர் அம்மன், சந்திரசேகர் உற்சவ வீதி உலா நடைபெற உள்ளது. 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது.