திருவானைக்காவல் கோவில் எட்டுத்திக்கு கொடியேற்றத்தை தொடர்ந்து கொடிமரத்துக்கு கோவில்யானை மரியாதை செலுத்தியகாட்சி 
ஆன்மிகம்

திருவானைக்காவல் கோவிலில் எட்டுத்திக்கு கொடியேற்று விழா

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் எட்டுத்திக்கு கொடியேற்று விழா நடைபெற்றது. 19-ந்தேதி பங்குனி தேரோட்டம் நடக்கிறது.

இக்கோவிலில் பங்குனி தேரோட்டம் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 9 மணியளவில் கொடிமரம் அருகே வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்தனர். அப்போது மூன்றாம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தின் போது கோவில் யானை அகிலா கொடி மரங்களுக்கு மரியாதை செலுத்தியது. இரவு சோமாஸ்கந்தர் வெள்ளி ஏக சிம்மாசனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


விழாவையொட்டி உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த போது எடுத்த படம்.

விழாவின் 2-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) இரவு சுவாமி சூரியபிறை வாகனத்திலும், அம்மன் சந்திரபிறை வாகனத்திலும், நாளை(வெள்ளிக்கிழமை) இரவு பூத வாகனம், காமதேனு வாகனத்திலும், 17-ந் தேதி கைலாச வாகனம், கிளி வாகனத்திலும், 18-ந் தேதி சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி தெருவடைச்சானுடன் வீதியுலா வருகின்றனர்.

SCROLL FOR NEXT