திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம். 
ஆன்மிகம்

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர்.

திருவையாறில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிப்பூர விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிப்பூர விழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் அம்மன் கோவில் கொழுமண்டபத்தில் சொற்பொழிவும், இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அதை தொடர்ந்து கடந்த 31-ந்தேதி ஆடி அமாவாசையையொட்டி ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் பஞ்சமூர்த்திகளுடன் வாகனத்தில் புறப்பட்டு புஷ்யமண்டப காவிரி ஆற்று படித்துறையில் தீர்த்தவாரி நடைபெற்றது. இரவு கோவில் தென்கயிலாயத்தில் அப்பர் கயிலைக்காட்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அப்பர்பெருமானை தரிசனம் செய்தனர்.

விழாவில் நேற்று ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது. அப்போது தேரை திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். இன்று(சனிக்கிழமை) கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் குருமகாசந்நிதானம் இளைய சந்நிதானம் உத்தரவின்படி கட்டளை விசாரணை கார்பார் சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.