திருவையாறு ஐயாறப்பர் 
ஆன்மிகம்

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் நவராத்திரி விழா

திருவையாறில் உள்ள அறம்வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் கோவிலில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

திருவையாறில் உள்ள அறம்வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் கோவிலில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவையொட்டி அறம்வளர்த்த நாயகி சன்னதியில் கொலுவைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி சரஸ்வதி அம்பாள் உதவிபெறும் தொடக்கப்பள்ளியை சேர்ந்த மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் லலிதாம்பிகை பாடல்கள், தேவார பாடல்கள் பாடப்பட்டன. அதைத்தொடர்ந்து ஒயிலாட்டம், கோலாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக அறம்வளர்த்தநாயகி சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.