கோவில் இணை ஆணையர் பாரதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ் மாதமான மார்கழி வருகிற 16-ந் தேதி தொடங்கி, அடுத்த மாதம்(ஜனவரி) 13-ந் தேதி நிறைவு பெறுகிறது. மார்கழி மாதத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விசுவரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம் நடக்கிறது.
மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனைக்கு பின்னர் கோவில் நடை திருக்காப்பிடப்படும்.
ஜனவரி 1-ந் தேதி(திங்கட்கிழமை) ஆங்கில வருட பிறப்பு மற்றும் ஜனவரி 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தைப்பொங்கல் திருநாள் ஆகிய நாட்களில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.
ஜனவரி 2-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு 2.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 3 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.