தல்லாகுளம் பெருமாள் கோவில் 
ஆன்மிகம்

தல்லாகுளம் பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழா19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

தல்லாகுளம் பெருமாள் கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழா வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக 18-ந்தேதி அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடைபெறும்.

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் புரட்டாசி பெருந்திருவிழா முக்கியமானதாகும். இந்த விழா வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக 18-ந்தேதி அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடைபெறும்.

19-ந்தேதி இரவு அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 20-ந்தேதி காலை கிருஷ்ண அவதாரம், அன்று இரவு சிம்மவாகனத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெறும். 21-ந்தேதி காலை ராம அவதாரம், இரவு அனுமார் வாகன புறப்பாடு, 22-ந் தேதி காலை கஜேந்திர மோட்சம், இரவு கருட வாகன புறப்பாடு, 23-ந்தேதி காலையில் ராஜாங்க சேவை, இரவு சேஷ வாகனத்தில் புறப்பாடு நடைபெறுகிறது.

26-ந்தேதி காலையில் வெண்ணை தாழியும், 27-ந் தேதி காலையில் திருத்தேர், அன்றிரவு பூப்பல்லக்கு விழா, 28-ந் தேதி காலையில் தீர்த்தவாரி, இரவு பூச்சப்பரம் நடைபெறும். 29-ந்தேதி காலையிலும், மாலையிலும் தெப்ப உற்சவமும், 30-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவிலின் உள் பிரகாரத்திலேயே அரசு வழிகாட்டுதல்படி நடைபெறும். பக்தர்கள் கூட்டமாக வராமல் வரிசையாக வரவேண்டும். முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.