சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் 
ஆன்மிகம்

சுசீந்திரம் கோவிலில் பிரதோஷ வழிபாடு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் நடைபெறும் நித்திய பூஜைகள் முடிந்ததும், பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் யாரையும் கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

மாலை மலர்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு மாதம் தோறும் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று கோவிலில் நடைபெறும் நித்திய பூஜைகள் முடிந்ததும், பிரதோஷ வழிபாடு நடந்தது.

இதில் பக்தர்கள் யாரையும் கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் கோவிலின் வெளியே காத்திருந்து, பிரதோஷ வழிபாடு முடிந்த பிறகு, கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்