ஆன்மிகம்

ஞாயிற்றுகிழமைகளில் அம்மனை வழிபடுவது விஷேசம்!

தனது முழு உக்கிர நிலையில் இருப்பாள் அம்பிகை.

நன்மலர் தாமரைதாளால் வெண்மதிசூடி செஞ்சடைசூரியன் சூட்டி

நஞ்சுடை பகைவர்மால வேலேந்தி சூலமதில் குருதிபுனலோட

நாககுடைகீழ் நல்லருள் தருவாள் தாயாகியுமான தடாதகை

நன்மலர்சூடி செந்தீயேற்ற செழுமையும் தருவாளே!

ஞாயிறு என்றாலே அனைவருக்கும் முதலில் நியாபகத்திற்கு வருவது சூரியன். அத்தகைய சூரியனின் முழு பிரகாசத்தையும் பேராற்றலையும் கொண்டு உலகத்தின் தாயக விளங்குபவள் அம்பிகை.

இவளை பல்வேறு நாமங்கள் கொண்டு பலராலும் போற்றப்பட்டு வழிபடப்படுகிறாள். ஆதி சக்தியின் அம்சங்களான தேவி பார்வதி, சமயபுரத்தில் மாரியம்மனாகவும் கொள்ளோரில் மூகாம்பிகையாகவும் மைசூரில் சாமுண்டீஸ்வரியாகவும், மதுரையில் மீனாட்சியாகவும் கஞ்சியில் காமாட்சியாகவும் ஒவ்வொரு ஊரிலும் அவதாரத்திற்கேற்ப பெயர் பெற்று அருள்பாலிக்கிறார்.

ஊருக்கேற்ப பெயர் மாறினாலும் ஒவ்வொரு கோவிலிலும் தனது முழு சக்தியோடு நாடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து அருள் பாலிக்கிறாள்.

செய்வாய் மாற்றும் வெள்ளிக்கிழமைகள் அம்பிகைக்கு உகந்தநாட்களாகும். மற்ற நாட்களை விட ஏன் இந்த நாட்கள் மிகவும் சிறப்புபெற்றது என்றால் இவ்விரு நாட்களிலும் வரும் ராகு கால நேரம் மிகவும் அம்பிகைக்கு நெருக்கமானது. பிரபஞ்ச சக்தியோடு லயித்த படி அம்பிகை தன முழு உக்கிரநிலையில் இருப்பாள்.

எதிர்மறை சக்திகள் விலக இந்த ராகு கால நேரத்தில் சக்தியின் வடிவை வழிபடுவது சிறப்பு. குறிப்பாக இந்த நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபடுவது எதிர்மறை எண்ணங்களும் எதிர்மறை சக்திகளும் நீங்கும் என்பது ஐதீகம்.

அம்பிகையின் வடிவங்களில் ஒன்றான வராகி அம்மன் , பிரத்தியங்கிரா தேவி, காளி அம்மன் போன்ற தெய்வங்களை அம்மாவாசை பௌர்ணமி தினம் மட்டும் அல்லாமல் ஞாயிற்று கிழமைகளில் வழிபடுவதும் சிறப்பு.

தனது முழு உக்கிர நிலையில் ராகு காலத்தில் இருப்பாள். அப்போது நமது வேண்டுதல் நியாயமாக இருந்தால் கேட்டது கேட்டபடி நடக்கும். இத்துடன் ஞாயிறு விநாயகருக்கு உகந்த நாள். சிவனின் வழிபாடுகளில் பைரவருக்கு பிடித்த நாளும் ஆகும்.

ராகு காலத்தில் வழிபட இயலாதவர்கள், மாலை அந்தி சாயும் வேளையில் விளக்கேற்றி வழிபடலாம்.

நோய், மந்தநிலை, மனக்குழப்பம் போன்றவற்றில் இருந்து நலமாகவும், கல்வியில் நன்றாக படிக்கவும், வேலைவாய்ப்பு கிடைக்கவும் குடும்பத்தில் அமைதி நிலவவும் ஞாயிற்று கிழமைகளில் அம்மன் தெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகும்.