ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை பொருட்கள் அனுப்பப்பட்டபோது எடுத்த படம். 
ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் கோவில் சார்பில் திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மாலை மலர்

அதன்படி நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலிருந்து திருப்பதிக்கு எடுத்துச்செல்லப்படும் வஸ்திரங்கள், குடைகள், அனைத்து வகை மலர்கள், பழங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் அனைத்தும் கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.


திருப்பதி ஏழுமலையானுக்கு அனுப்பப்பட்ட வஸ்திர மரியாதை பொருட்களை படத்தில் காணலாம்.

தொடர்ந்து மங்கல பொருட்கள் உள்ள ஒரு தட்டை யானை மீது வைத்தும், மற்ற தட்டுகளை அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் கையில் எடுத்து கொண்டும் ஊர்வலமாக வந்து பின்னர் கோவிலுக்கு உள்ளே வந்தனர். பின்னர் இரவில் வஸ்திர மரியாதையை திருப்பதிக்கு காரில் எடுத்து சென்றனர்.