கள்ளழகர் கோவில் 
ஆன்மிகம்

சூரிய கிரகணத்தையொட்டி கள்ளழகர் கோவிலில் நாளை நடைசாத்தப்படுகிறது

வருகிற 21-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) சூரிய கிரகணம் ஏற்படுவதையொட்டி மதுரை கள்ளழகர் கோவிலில் நாளை(சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு அனைத்து பூஜைகளும் நடைபெற்று முடிந்து கோவில் நடை முழுமையாக சாத்தப்படும்.

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலின் நிர்வாக அதிகாரி அனிதா ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வருகிற 21-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மிருக சீரிஷ நட்சத்திரம், அமாவாசை திதி பகலில் சூரிய கிரகணம் ஏற்படுவதையொட்டி மதுரை கள்ளழகர் கோவில் அழகர்மலை உச்சியில் உள்ள ராக்காயி அம்மன் கோவில், 6-வது படைவீடு சோலைமலை முருகன் கோவில் மற்றும் உபகோவில்களான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில், அய்யப்பன் கோவில், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவில், மேலூர் ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நாளை(சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு அனைத்து பூஜைகளும் நடைபெற்று முடிந்து கோவில் நடைகள் முழுமையாக சாத்தப்படும்.

மீண்டும் மறுநாள் 21-ந் தேதி அன்று பிற்பகல் 2.30 மணிக்கு வழக்கம்போல் இக்கோவில்களின் நடை திறக்கப்பட்டு கிரகண தோஷம், திருமஞ்சனம், விஸ்வரூபம், சிறப்பு ஆராதனம், நித்தியப்படி, திருவாராதனம் நடைபெறும். ஏற்கனவே ஊரடங்கு அமலில் உள்ளதால் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT