ஆன்மிகம்

சிவ பூஜைக்கான மாதங்களும், மலர்களும்

சிவ பூஜை செய்ய ஒவ்வொரு மாதங்களுக்கும் ஒவ்வொரு மலர்கள் உகந்தவை. இந்த மலர்களால் சிவ பூஜை செய்தால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.

மாலை மலர்

சித்திரை - பலாசம்,

வைகாசி - புன்னை,

ஆனி - வெள்ளெருக்கு,

ஆடி - அரளி,

ஆவணி - செண்பகம்,

புரட்டாசி - கொன்றை,

ஐப்பசி - தும்பை,

கார்த்திகை - கத்திரி,

மார்கழி - பட்டி,

தை - தாமரை,

மாசி - நீலோத்பலம்,

பங்குனி - மல்லிகை.

மாத பவுர்ணமிகளில் கீழே குறிப்பிடப்படுவனவற்றால் சிவ பூஜை செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடைந்து, சிவசாயுஜ்யம் அடையலாம்.

சித்திரை - மரிக்கொழுந்து,

வைகாசி - சந்தனம்,

ஆனி - முக்கனிகள்,

ஆ டி -பால்,

ஆவணி - நாட்டுச் சர்க்கரை,

புரட்டாசி - அப்பம்,

ஐப்பசி - அன்னம்,

கார்த்திகை - தீபவரிசை,

மார்கழி - நெய்,

தை - கருப்பஞ்சாறு,

மாசி - நெய்யில் நனைத்த கம்பளம்,

பங்குனி - கெட்டித் தயிர்.