சிவன் 
ஆன்மிகம்

பொன்னாக்குடி சிவன் கோவிலில் நாளை சனிப்பிரதோ‌‌ஷம்

தென் திருவண்ணாமலை என்று போற்றப்படும் நெல்லை பொன்னாக்குடி அருணாச்சலேஸ்வரர்- உண்ணாமலை அம்பாள் கோவிலில் நாளை (சனிக்கிழமை) சனிப்பிரதோ‌‌ஷம் நடைபெற உள்ளது.

தென் திருவண்ணாமலை என்று போற்றப்படும் நெல்லை பொன்னாக்குடி அருணாச்சலேஸ்வரர்- உண்ணாமலை அம்பாள் கோவிலில் நாளை (சனிக்கிழமை) சனிப்பிரதோ‌‌ஷம் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு நாளை மாலை 3.30 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தி பகவானுக்கு மஞ்சள், பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், அரிசி மாவு, திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

பின்னர் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெகநாதன் செய்து வருகிறார்.