ஆன்மிகம்

சனி பகவானுக்குரியவை

நவக்கிரகங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சனி கிரகம் இருக்கிறது. சனி பகவானுக்கு உகந்தவை, பகையான கிரகங்கள், நட்பு கிரகங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

மாலை மலர்

காரகன் - ஆயுள்

தேவதை - ஈஸ்வரன்

தானியம் - எள்

உலோகம் - இரும்பு

நிறம் - கருப்பு

குணம் - தாமஸம்

சுபாவம் - குரூரர்

சுவை - கசப்பு

திக்கு - மேற்கு

உடல் அங்கம் - தொடை

தாது - நரம்பு

நோய் - வாதம்

பஞ்சபூதம் - காற்று

பார்வை நிலை - தான் நின்ற ராசியில்இருந்து 3,7,10 ஆகிய இடங்களின் மீது முழுமையானபார்வை, 5,9 ஆகிய இடங்களில் அரை பங்கு பார்வை, 4,8 ஆகிய இடங்களில் முக்கால் பங்கு பார்வை.

பாலினம் - ஆண்- பெண் இல்லாத தன்மை

உபகிரகம் - குளிகன் (மாந்தி)

ஆட்சி ராசி - மகரம், கும்பம்

உச்ச ராசி - துலாம்

மூலத்திரிகோண ராசி - கும்பம்

நட்பு ராசி - ரிஷபம், மிதுனம், கன்னி

சமமான ராசி - தனுசு, மீனம்

பகை ராசி - கடகம், சிம்மம், விருச்சிகம்

நீச்ச ராசி - மேஷம்

திசை ஆண்டுகள் - பத்தொன்பது ஆண்டுகள்

ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - இரண்டரை ஆண்டுகள்

நட்பு கிரகங்கள் - புதன், சுக்ரன், ராகு, கேது

சமமான கிரகம் - குரு

பகையான கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்

அதிக பகையான கிரகம் - சூரியன்

இதர பெயர்கள் - கரியவன், அந்தகன், காளி, கௌரி, மந்தன், முதுமகன், முடவன்

நட்சத்திரங்கள் - பூசம், அனுஷம், உத்திரட்டாதி