ஆன்மிகம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு

நாளை முதல் 28-ந் தேதி வரை சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.

திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு பிரம்ம தத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார் தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும்.

நாளை (செவ்வாய்கிழமை) முதல் 28-ந் தேதி வரை சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

26-ந் தேதி திருவோண தினத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் ஐயப்ப பக்தர்களுக்கு ஓண சத்யா (விருந்து) வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.