ஆன்மிகம்

ஒரே பாடலில் ராமாயணம்... ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஸ்ரீராம்

காஞ்சி மகா பெரியவர் ராமாயண காவியத்தை, 10 வரிகளைக் கொண்ட பாடலாக சில விநாடிகளில் படித்து முடிக்கும் வகையில் இந்த உலகத்திற்கு வழங்கியுள்ளார்.

"ராமனின் புகழ்பாடும் ராமா காவியம்தான் 'ராமாயணம்'. பல ஆயிரம் பாடல்களால் ஆன இந்த காவியத்தை படிப்பது என்பது அனைவராலும் இயலாத காரியம். அதே நேரம் இதை முழுவதுமாக படித்தால், மிகப்பெரிய புண்ணியம் நம்மை வந்தடையும் என்பது ஆன்மிக சான்றோர்களின் வாக்கு.

ஆனால் இன்றைய அவசர காலத்தில் அதை பொறுமையாக அமர்ந்து படிக்க எவருக்கும் நேரம் இல்லை. இப்படி ஒரு காலம் வரும் என்பதை முன்கூட்டியே அறிந்ததாலோ என்னவோ, காஞ்சி மகா பெரியவர் என்று அழைக்கப்படும் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள், அந்த ராமாயண காவியத்தை, 10 வரிகளைக் கொண்ட பாடலாக சில விநாடிகளில் படித்து முடிக்கும் வகையில் இந்த உலகத்திற்கு வழங்கியுள்ளார்.

'ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்

சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம் அங்குல்யா பரண சோபிதம்

சூடாமணி தர்சனகரம்

ஆஞ்சநேய மாஸ்ரயம்

வைதேஹி மனோகரம்

வானர சைன்ய சேவிதம்

சர்வமங்கள கார்யானுகூலம்

சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம்

ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஸ்ரீராம்'

இந்த பாடலை தினமும் எத்தனை முறை வேண்டுமானாலும் பாராயணம் செய்யலாம். ஒவ்வொரு முறை இந்த

பாடலை வாசிக்கும்போதும், ஒரு முறை ராமாயணத்தை வாசித்து முடித்த பெரும் புண்ணியம் நமக்குக் கிடைக்கப்பெறும் என்று சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் கூறியிருக்கிறார்.

SCROLL FOR NEXT