கடலூர் புதுப்பாளையத்தில் செங்கமல தாயார் சமேத ராஜகோபாலசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் நடை திறக்கப்பட்டு ராஜகோபாலசுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
தொடர்ந்து மாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து பெருமாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.