கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரத்தில் ஸ்ரீராகவேந்திரா பிருந்தாவனம் உள்ளது. இங்கு சிறப்பு யாகம் நடந்தது. இந்த யாகத்தை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி மணிகண்டன் போற்றி தலைமையில் வேதமந்திரத்தை ஓதுவார்கள் நடத்தினார்கள்.
பின்னர் ராகவேந்திரா பிருந்தாவனத்தில் உள்ள விநாயகர், நாகராஜர், விஷ்ணு துர்க்கை அம்மன், லட்சுமி நரசிம்மர், பஞ்சமுக ஆஞ்சநேயர், ஷீரடிசாய்பாபா, ராகவேந்திரர், ஸ்ரீகாலபைரவர் ஆகிய சன்னதிகளில் சிறப்பு வழிபாடுகளும், தீபாராதனையும் நடந்தது.
மாலையில் ஷர்ப்ப சாந்தி பூஜையும் நடந்தது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முககவசம் அணிந்து கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மகாதானபுரம் ராகவேந்திரா பிருந்தாவனம் நிர்வாகி ராகவேந்திரா மோகன் தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.