ஆன்மிகம்

எடப்பாடி அருகே பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

எடப்பாடி வேதநாயகி உடனுறை பசுபதீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம், கும்பாபிஷேக 3-ம் ஆண்டு விழா யாகபூஜைகளுடன் நடைபெற்றது.

மாலை மலர்

எடப்பாடி அடுத்த வெள்ளர்நாயக்கன்பாளையம் வேதநாயகி உடனுறை பசுபதீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம், கும்பாபிஷேக 3-ம் ஆண்டு விழா யாகபூஜைகளுடன் நடைபெற்றது.

முன்னதாக வேதநாயகி பசுபதீஸ்வரர் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் ஆவணியூர் கோட்டையில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் அழகராயப்பெருமாள் உற்சவமூர்த்திகள் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலுக்கு வந்தவுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.

அதனைத்தொடர்ந்து வேதநாயகி, பசுபதீஸ்வரர் சாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் முன்னாள் நகரசபை தலைவர் கதிரேசன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், பசுபதீஸ்வரர் அறக்கட்டளை நிர்வாகத்தினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.