மாசி மகத்தையொட்டி, பழனி முருகன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் பாரவேல் மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களை சங்குகளில் வைத்து உலக நலன், அமைதி மற்றும் விவசாயம் செழிக்க வேண்டி யாகம் நடத்தப்பட்டது.
பின்னர் யாகபூஜையில் வைக்கப்பட்ட புனித நீரால் உச்சிக்காலத்தில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.