தூய ஜெபமாலை அன்னை ஆலய தேர்பவனி 
ஆன்மிகம்

தூய ஜெபமாலை அன்னை ஆலய தேர்பவனி

இட்டமொழி அருகே உள்ள மன்னார்புரம் தூய ஜெபமாலை அன்னை ஆலய தேர்பவனி நடந்தது. விழாவில் பங்குதந்தைகள் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

மாலை மலர்

இட்டமொழி அருகே உள்ள மன்னார்புரம் தூய ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றன.

கடந்த 6-ந்தேதி சிறப்பு மாலை ஆராதனையும், அன்னையின் தேர்பவனியும் நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் பெருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி, நற்கருணை பவனி, தேர்பவனி ஆகியவை நடைபெற்றன. விழாவில் பங்குதந்தைகள் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை பங்குதந்தை சகாயராஜ் வல்தாரிஸ் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு பேரவை உறுப்பினர்கள், இறைமக்கள் செய்திருந்தனர்.