சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நடந்து வருகிறது. வருகிற ஏப்ரல் 1-ந்தேதி, பம்பையில் நடைபெறும் ஆராட்டு சடங்குகளுக்கு பின் அன்றைய தினம் மாலையில் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும்.
அதை தொடர்ந்து சித்திரை மாத பூஜைக்காக கோவில் நடை ஏப்ரல் 10-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். மறுநாள் 11-ந் தேதி முதல் வழக்கமான பூஜை, வழிபாடு தொடர்ந்து நடைபெறும். மாத பூஜை மற்றும் விஷு பண்டிகை சிறப்பு பூஜை, வழிபாடுகளுக்கு பிறகு 18-ந்தேதி இரவு நடை அடைக்கப்படும்.
இந்த நிலையில் சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு தரிசன ஆன்லைன் முன்பதிவு நேற்று முதல் நடைபெற்று வருவதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.