ஆன்மிகம்

‘ஓம்’ விளக்கம்

‘அ’ என்பது இறைவனையும், ‘உ’ என்பது உலக உயிர்களையும், ‘ம்’ என்பது பஞ்ச பூதங்களாளான இயற்கையையும் குறிக்கும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாலை மலர்

இரண்டு பொருட்கள் உயிருள்ளவை என்பதை உணர்த்த ‘அ’, ‘உ’ என்ற இரண்டு உயிரெழுத்துகளும், உயிரற்ற ஜடமான இயற்கையாகிய இந்தப் பிரபஞ்சத்தை உணர்த்த ‘ம்’ என்ற மகாரம் குறிக்கப்படுகிறது. மேலும் ஓம் என்பதற்கு எல்லாவற்றையும் பாதுகாப்பது என்பது பொருளாகும். முதலில் தாயின் கர்ப்பத்தில் அது நம்மை காக்கிறது. அதனால் நாம் நிலை பெற்றோம்.

ஓம் என்ற சொல் ஆண் பாலும் இல்லை, பெண் பாலும் இல்லை, மூன்றாம் பாலினமும் இல்லை. ஒருமை ஒலியே. இதற்கு ஒருமையோ, பன்மையோ கிடையாது. வேற்றுமை உருபுகளும், அதாவது முதலாம் வேற்றுமை முதல் எட்டாம் வேற்றுமை வரையுள்ள உருபுகளும் இதற்குக் கிடையாது. இலக்கண வரம்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது.