ஆன்மிகம்

அலுவலகத்தில் எந்தப் படம் வைக்கலாம்?

தொழில் வளம் சிறக்க, அதிர்ஷ்ட தேவதை இல்லத்தில் அடியெடுத்து வைக்க, நமக்குரிய அதிர்ஷ்ட சின்னங்களை வண்ணப் படங்களை தொழில் நிலையத்தில் பார்வைப் பொருளாக வைத்தால் தொழில் வளர்ச்சியடைந்துவிடும்.

27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 27 விதமான அதிர்ஷ்ட சின்னங்கள் இருக்கின்றன. தொழில் வளம் சிறக்க, அதிர்ஷ்ட தேவதை இல்லத்தில் அடியெடுத்து வைக்க, நமக்குரிய அதிர்ஷ்ட சின்னங்களை வண்ணப் படங்களை தொழில் நிலையத்தில் பார்வைப் பொருளாக வைத்தால் தொழில் வளர்ச்சியடைந்துவிடும்.

மேல்நோக்கி எரியும் தீபம், விருட்சங்கள் போன்றவற்றை தொழில் நிலையத்தில் வைத்தால் தொழில் வளர்ச்சி ஏற்படும். மேல்நோக்கிச் செல்லும் வரைபடங்களை வைத்தால் தொழில் வளர்ச்சி மேலோங்கும். நீர்வீழ்ச்சி போன்ற கீழ் நோக்கிச் செல்லும் படங்களை அலுவலகத்தில் வைப்பதை தவிர்ப்பது நல்லது.

இது பொதுநியதி என்றாலும், அவரவர் ஜாதகத்திற்கேற்ற வண்ணப்படங்களைத் தேர்ந்தெடுத்து தொழில் நிலையத்தின் எந்தப் பகுதியில் வைத்தால் செய்யும் தொழிலில் சிறப்பான லாபம் கிடைக்கும் என்பதை அறிந்து செயல்படுவது நல்லது. குறிப்பாக அசுவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குதிரை முகம் அல்லது முழுக்குதிரை படத்தை வைக்கலாம்.

ரோகிணியில் பிறந்தவர்கள் கிருஷ்ணர் படம் அல்லது ஆழித்தேர், ஆலமரம், கோபுரம் ஆகிய படங்களை வைக்கலாம். இதுபோல் நமது நட்சத்திர அடிப்படையில் படங்களைத் தேர்வு செய்து வைத்தால் கடன் சுமை குறையும். வருமானம் பெருகும். 

SCROLL FOR NEXT