நெல்லையப்பருக்கு சிறப்பு அபிஷேகம் 
ஆன்மிகம்

நெல்லையப்பருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆகம விதிமுறைப்படி நெல்லையப்பர் கோவிலில் தினமும் பூஜைகள் நடந்து வருகிறது. அதன்படி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

மாலை மலர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும், ஆகம விதிமுறைப்படி கோவிலில் தினமும் பூஜைகள் நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று காலை கோவில் பட்டர்கள் 2 பேர் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி, சுவாமி, அம்பாள் அபிஷேகத்துக்கு திருமஞ்சன தீர்த்தம் எடுத்து வந்தனர்.

நெல்லை டவுன் திருப்பணி முக்கில் இருந்து கோவில் யானை காந்திமதி முன் செல்ல மேளதாளத்துடன் திருமஞ்சன தீர்த்தம் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.