நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் மூடப்பட்டது- பக்தர்கள் வெளியில் நின்று தரிசனம் 
ஆன்மிகம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் மூடப்பட்டது- பக்தர்கள் வெளியில் நின்று தரிசனம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தினசரி நடைபெறும் வழக்கமான பூஜை நடத்தப்பட்டது. பின்னர் சாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஆடி அமாவாசையையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பொங்கல் வைத்தல், நேர்த்திக்கடன் செலுத்துதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைக்கு மாவட்டம் நிர்வாகம் தடை விதித்துள்ளது. கோவில்களில் தினசரி பூஜை நடத்தப்பட்டாலும் பக்தர்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தினசரி நடைபெறும் வழக்கமான பூஜை நடத்தப்பட்டது. பின்னர் சாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கோவில் நடை மூடப்பட்டது. எனவே பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர். அங்கு கூட்டம் அதிகமாக கூடுவதை தவிர்க்க கோவில் பணியாளர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர்.

இதேபோல் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாமக்கல் நரசிம்மசாமி கோவில், பலப்பட்டரை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்கள் நேற்று மூடப்பட்டு இருந்தன. இவற்றில் பக்தர்கள் வெளியில் நின்று சாமி தரிசனம் செய்து செல்வதை பார்க்க முடிந்தது.