தென்கரைகோவிலில் முருகப்பெருமான் திருக்கல்யாணம் 
ஆன்மிகம்

தென்கரைகோவிலில் முருகப்பெருமான் திருக்கல்யாணம்

சோழவந்தான் அருகே தென்கரையில் உள்ள மூலநாத சாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி முருகப்பெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

சோழவந்தான் அருகே தென்கரையில் உள்ள மூலநாத சாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி முருகப்பெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

பக்தர்கள்அங்குள்ள கிருஷ்ணன் கோவிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு மற்றும் சீர்வரிசை எடுத்து மேளதாளத்துடன் கோவிலில் உள்ள திருமண மண்டபத்தை வந்தடைந்தனர்.

அங்கு யாக வேள்வி நடத்தி திருக்கல்யாணம் நடந்தது. சிறப்பு அர்ச்சனை, பூஜையும் நடந்தது. இதில் கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு சுவாமி வீதி உலா நடைபெற்றது.

SCROLL FOR NEXT