ஆன்மிகம்

திருமங்கலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்

திருமங்கலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் ஆலய கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்கு பிறகு விமரிசையாக நடை பெற்றது.

மதுரை மீனாட்சிஅம்மன் திருக்கல்யாணத்திற்கு திருமாங்கல்யம் கொண்டு செல்லும் பெருமைவாய்ந்த புகழ்பெற்ற தலமான இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட திருமங்கலம் ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா கடந்த 2002-ம்ஆண்டு நடைபெற்றது.

அதன் பிறகு 15ஆண்டுகள் கழித்து கடந்த சிலநாட்களாக கோவிலில் திருப்பணிகள் நடந்தன. கோபுரங்களுக்கு வண்ணம்தீட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறு வதையொட்டி 4-ந் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை நடை பெற்றது.

இதனை தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, நான் காம் கால யாகபூஜைகள் நடைபெற்றது. இன்று காலை 6.45மணிக்கு சுவாமி அம்பாள்,பரிவார மூர்த்திகள் மற்றும் விமானத் திற்கு வேத,மந்திரங்கள் முழங்க புனித நீரால் கோபு ரங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பங்கேற்று சாமிதரிசனம் செய்தார். தொடர்ந்து சொக்கநாதர் - மீனாட்சி சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு பூஜைகள் நடை பெற்றது.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. என்.எஸ்.வி. சித்தன், அ.தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன், நகரசெயலாளர் விஜயன், முன்னாள் யூனியன் சேர்மன் தமிழழகன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன் மகாலிங்கம் ராமசாமி மற்றும் மதுரை தெற்குமாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயராமன் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT