ஆன்மிகம்

மண்டைக்காடு கோவிலில் கலசாபிஷேக விழாவில் யாகசாலை பூஜை

மண்டைக்காடு கோவிலில் கலசாபிஷேக விழாவில் 2-ம் கால யாக சாலை பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கலசாபிஷேக விழா கடந்த 8-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று பூத சுத்தி, பாபனா அபிஷேகம், ஆச்சார்ய உற்சவம் போன்றவை நடந்தது. நிகழ்ச்சியை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தொடங்கி வைத்தார்.

கண்காணிப்பாளர் ஜீவானந்தம், மேலாளர் ஆறுமுகதரன், பொறியாளர் அய்யப்பன், வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேற்று காலை 9 மணிக்கு சாத்தான்குளம் அகோர சிவம் பகவதி குருக்கள் தலைமையில் 2-ம் கால யாக சாலை பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தீபாராதனை, தோரணபூஜை, காலை 9 மணிக்கு கலசாபிஷேகம், மதியம் 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, அன்னதானம், இரவு 7 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு போன்றவை நடக்கிறது. 

SCROLL FOR NEXT