மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கலசாபிஷேக விழா நடந்த போது எடுத்த படம். 
ஆன்மிகம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கலசாபிஷேக விழா

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கலசாபிஷேக விழா நேற்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

மாலை மலர்

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் கலசாபிஷேக விழா நேற்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி நேற்று அதிகாலை கணபதிஹோமம், நவகிரக ஹோமம், தீபாராதனை, மாலை பகவதி சேவை குருதிபூஜை, சுமங்கலி பூஜை, இரவு ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடந்தது.

இன்று (சனிக்கிழமை) காலை 2-ம் யாகசாலை பூஜை, மதியம் தீபாராதனை, மாலை 5 மணிக்கு வடுக பைரவர் பூஜை, இரவு 7 மணிக்கு 3-ம் யாகசாலை பூஜை, ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4-ம் யாகசாலை பூஜை, காலை 9 மணிக்கு கலசாபிஷேகம், பகல் 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு புஷ்பாஞ்சலி ஆகியனவும் நடக்கிறது.