மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்த காட்சி. 
ஆன்மிகம்

மணக்குள விநாயகர் கோவிலில் பகதர்கள் சாமி தரிசனம்

புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வாக வழிபாட்டுதலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மாலை மலர்

புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வாக வழிபாட்டுதலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் நேற்று கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.