விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. 10-ம் நாளான நேற்று காலை நடராஜர் தரிசனமும், பிற்பகலில் பிரம்ம தீர்த்தமாகிய தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், தொடர்ந்து இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் காட்சியளித்தல் நிகழ்ச்சியும், இரவு கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
11-ம் நாளான இன்று (புதன்கிழமை) காலை திருக்குறிப்பு தொண்டர் உள் புறப்பாடும், இரவு சுவாமி தங்க குதிரை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கு வாகனத்திலும் புறப்பாடு நடைபெறுகிறது. 12-ம் நாளான நாளை (வியாழக் கிழமை) தாயுமான அடிகள் உற்சவமும், மாலை 5 மணிக்கு சிரகிரி தட்சிணாமூர்த்தி சுவாமிக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அபிஷேக ஆராதனையும், இரவு 7 மணிக்கு மேல் திருமுறை பாராயணத்துடன் சுவாமி, அம்பாள் யாதாஸ்தானம் சேர்தல் நிகழ்ச்சியும் நடைபெறு கிறது.