மகாவிஷ்ணுவின் ஆயுதங்களில் ஒன்று சுதர்சன சக்கரம். விஸ்வகர்மாவின் மகள் சஞ்சனாவை சூரிய பகவான் திருமணம் செய்து கொண்டார். ஆனால் சூரியனின் அதிக வெப்பத்தை, சஞ்சனாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இதை அறிந்த விஸ்வகர்மா மகளின் வேதனையைப் போக்க முடிவு செய்தார். சூரியனின் சக்தியை திருப்பி விடுவதற்கு ஒரு இயந்திரத்தை தயார் செய்து, அவரை அதில் அமரச் செய்தார்.
அந்த சக்தியில் இருந்து ஒரு வலிமை மிகுந்த சக்கர ஆயுதம், சிவபெருமானின் திரிசூலம், முருகப்பெருமானின் வேல், புஷ்பக விமானம் போன்றவை வெளிப்பட்டன. இதில் சக்கர ஆயுதம், சுதர்சனச் சக்கரம் என்று அழைக்கப்பட்டது. அதனை மகாவிஷ்ணுவிடம் அளித்தனர். இது எதிரிகளை அழிப்பதில் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதமாக பயன்படுகிறது.