விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம். 
ஆன்மிகம்

தூய பாத்திமா அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மாலை மலர்

விருத்தாசலத்தில் புகழ்பெற்ற தூய பாத்திமா அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 43-வது ஆண்டு பெருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஏசு கிறிஸ்துவின் பாடல்களை பாடியபடி கொடியை பவனியாக எடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து ஆலயத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொடி மரத்தில் புதுவை சமூகசேவை மையத்தின் இயக்குனர் அருமைசெல்வம் கொடியை ஏற்றினார்.

இதையடுத்து கடலூர் புனித ஆக்னேஸ் குருமட அதிபர் அருட்தந்தை ரொசாரியோ, அருட்தந்தை மிக்கேல்புரம் மகிமை, பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் ஆகியோர் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. வருகிற 12-ந் தேதி வரை தினந்தோறும் சிறிய தேர்பவனி மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி வருகிற 13-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கும், இரவு 9 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.