சிவபெருமானின் துணைவியார் உமாதேவி. இவர் பார்வதி தேவி என்றும் அழைக்கப்படுகின்றார். இவர் வீரத்துக்கு தலைவி. இவர்களது பிள்ளைகள் பிள்ளையாரும், முருகப் பெருமானும் ஆவர். பிள்ளையார் அறிவையும், முருகப்பெருமான் ஆற்றலையும் குறிக்கும் உருவங்களாக விளங்குகின்றனர்.
சிவபெருமான், உமாதேவி, பிள்ளையார், முருகப்பெருமான் ஆகிய நால்வரும் சேர்ந்து குடும்பமாக தோன்றும் அழகிய காட்சி, உலக மக்களுக்கு குடும்ப வாழ்வின் சிறப்பை உணர்த்துவதாக விளங்குகிறது.
மேலும் இத்தெய்வ குடும்பத்தில், இத் தெய்வங்களின் வாகனங்களான எருது, பாம்பு, சிங்கம், மயில், மூஞ்சூறு முதலியன தங்கள் வேற்றுமைகைளையும், பகைமையும் மறந்து நட்புடன் காணப்படுகின்றன. இறைவன் சந்நிதியில் எல்லா உயிர்களும் சமம் என்ற உண்மையை இக்காட்சி நமக்கு உணர்த்துகின்றது.