லட்சுமியின் பாதத்தில் உள்ள 16 சின்னங்களைப் பற்றியும், அவற்றால் என்ன பலன் என்பதையும் இங்கே பார்க்கலாம்.
இடது பாதம் :
* வில், அம்பு - லட்சியத்தை நோக்கிய பார்வைக்காக..
* மீன் - வளம் மற்றும் நலம் ஆகியவற்றுக்காக..
* கும்பம் - விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக..
* சந்திரன் - ஒளி பொருந்திய தூய எண்ணங்களுக்காக..
* திலகம் - வெற்றியை குறிப்பிடக்கூடியதாக..
* முக்கோண வடிவம் - நிச்சய வெற்றிக்காக..
* சக்கர ரேகை - சர்வ மங்களங்களையும் குறிப்பிடும் சின்னம்..
வலது பாதம் :
* ஸ்வஸ்திக் - ஞானம் மற்றும் வளம் கிடைக்க..
* சக்கரம் - தீயவற்றை அழிக்க..
* சங்கு - சக்தி மற்றும் வெற்றிக்காக..
* சூரியன் - சகல காரிய வெற்றிக்காக..
* கும்பம் - விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக..
* துவஜம் எனப்படும் கொடி - சரியான பாதையை காட்டுவதற்காக..
* வஜ்ராயுதம் - லட்சியத்தை தவறாது அடைவதற்காக..
* தாமரை - செல்வத்தை குறிக்க..
* திரிசூலம் - மும்மூர்த்திகளையும் குறிப்பிட..