ஆன்மிகம்

கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு அனுசரிப்பு

கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.

மாலை மலர்

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாட்களை லெந்து நாட்களாக கிறிஸ்த வர்கள் அனுசரிக்கிறார்கள். இதில் சாம்பல் புதன், குருத்தோலை ஞாயிறு, புனித வெள்ளி, ஈஸ்டர் ஆகிய 4 நாட்கள் முக்கிய தினங்களாக அனுசரிக்கப்பட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை நடைபெறும்.

இந்நிலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப் படுவதற்கு முன்னதாக எருசலேமில் அவருக்கு கொடுத்த வரவேற்பை நினைவு கூறும் வகையில் குருத்தோலை ஞாயிறு நேற்று நாடு முழுவதும் அனுசரிக் கப்பட்டது. இதையொட்டி திருப்பூர் பங்களா ஸ்டாப்பில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

தொடர்ந்து கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியபடி சென்றனர். ஆலயத்தில் இருந்து தொடங்கி அவினாசி ரோடு சிக்னல் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தனர். இந்த குருத்தோலை பவனியில் சிறப்பு செய்தியாளர் ஜோஸ்வா கரம் சந்தர், ஆயர் வில்சன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதுபோல் குமரன் ரோட்டில் உள்ள புனித கேத்தரீன் ஆலயம், முத்தணம் பாளையம் நற்கருணை நாதர் ஆலயம், ஆஷர்நகர் சி.எஸ்.ஐ. தூய லூக் ஆலயம், சபாபதிபுரம் டி.இ.எல்.சி. அருள்நாதர் ஆலயம் உள்பட திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு நேற்று அனுசரிக்கப்பட்டது. கிறிஸ்தவர்களும் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியபடி சென்றனர். இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.