ஆன்மிகம்

லட்சுமி கடாட்சம் தரும் குங்குமம்

மாங்கல்யம், பெண்களின் நெற்றி, தலை வகிட்டு பகுதிகளில் மகாலட்சுமி தேவி வாசம் செய்கிறாள். இந்த இடங்களில் பெண்கள் குங்குமத்தை வைத்துக் கொள்வதால், லட்சுமி தேவியின் அருளை முழுமையாகப் பெற முடியும்.

மாலை மலர்

பெண்களின் தலை வகிட்டின் நுனியை, ‘சீமந்தபிரதேசம்’ என்பார்கள். பெண்கள் அணியும் மாங்கல்யம், பெண்களின் நெற்றி, தலை வகிட்டு பகுதி ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் மகாலட்சுமி தேவி வாசம் செய்கிறாள். இந்த இடங்களில் பெண்கள் குங்குமத்தை வைத்துக் கொள்வதால், லட்சுமி தேவியின் அருளை முழுமையாகப் பெற முடியும். மேலும் வீட்டில் உள்ள தரித்திர நிலை விலகும்.

நாம் செய்யும் சேமிப்பு எந்த நிலையிலும் கரையாது. வீட்டிற்கு வரும் சுமங்கலி களுக்கு குங்குமம் கொடுப்பதால், கொடுப்பவர்- பெறுபவர் இருவருக்குமே மாங்கல்ய பலத்தைப் பெருக்கும். பெண்கள் ஒருவருக்கு குங்குமத்தை கொடுக்கும் முன்பாக, தாங்கள் இட்டுக் கொண்டபிறகே கொடுக்க வேண்டும். ஆண்கள் இரு புருவங்களையும் இணைத்தார் போல் உள்ள இடத்தில், குங்குமத்தை அணிவது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.