பராசக்தியின் அம்சமாக கருதப்படும் காவிரி, மகாவிஷ்ணுவின் சகோதரியாக கருதப்படுகிறாள். ஆடிப்பெருக்கின் போது பெருக்கெடுத்து ஓடிவரும் காவிரிக்கு ஸ்ரீரங்கம் பெருமாள் சீர்வரிசை வழங்குவதாக ஐதீகம். அன்று பெருமாள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள படித்துறையில் எழுந்தருள்வார்.
அங்கு அபிஷேகம் முடிந்ததும் மாலை, புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை, பாக்கு, பழங்கள் முதலிய சீர்வரிசைகளை யானையின் மேல் ஏற்றி ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து அம்மா மண்டபம் படித்துறைக்கு கொண்டு வருவார்கள். பெருமாள் முன்பு அந்த சீர்வரிசைகளை வைத்து ஆராதனை செய்த பின் அவற்றை காவிரிக்கு சமர்ப்பிப்பார்கள். இந்த காட்சியை காண்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்.