கருப்புசாமி 
ஆன்மிகம்

கருப்புசாமி கோவில் திருவிழாவில் வினோதம்: நள்ளிரவில் விளக்குகளை அணைத்து சிறப்பு பூஜை

செம்பட்டி அருகே எஸ்.புதுக்கோட்டை கிருஷ்ணாபுரத்தில் உள்ள பழமையான கருப்புசாமி கோவிலில், நள்ளிரவு வினோத வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாலை மலர்

செம்பட்டி அருகே எஸ்.புதுக்கோட்டை கிருஷ்ணாபுரத்தில் பழமையான கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கையொட்டி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதையொட்டி பக்தர்கள் கிடா வெட்டி, பொங்கல் வைத்தும், மொட்டை அடித்தும் வேண்டுதலை நிறைவேற்றினர். மேலும் நள்ளிரவு கோவிலில் வினோத வழிபாடு நடைபெற்றது. அப்போது, கோவிலில் உள்ள அனைத்து விளக்குகளை அணைத்துவிட்டு, இருளில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மறுநாள் அதிகாலை வரை பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.