மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் 
ஆன்மிகம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நாளை பிரதோ‌ஷ வழிபாடு: யு-டியூப்பில் நேரடி ஒளிபரப்பு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நாளை நடக்கும் பிரதோத‌ஷ வழிபாட்டை நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மாலை மலர்

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. இக்கோவிலில் பிரதோ‌ஷ வழிபாடு சிறப்பாக நடைபெறும். நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேரில் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் தரிசனத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளதால் கடந்த 5 மாதங்களாக யு-டியூப் சேனல் மூலமாக நேரலையில் பிரதோ‌ஷ வழிபாட்டை பக்தர்கள் கண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நாளை மாலை 4.30 மணிக்கு நந்தி அபிஷேகமும் அதைத் தொடர்ந்து பிரதோ‌ஷ நாயகர் அபிஷேகமும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வை https://www.youtube.com/c/MYLAPOREKAPALEESWARARTEMPLE என்ற யு-டியூப் சேனல் மூலமாக நேரலையில் ஒளிபரப்ப கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.